குழந்தைகளுக்கு எது சரி? எது தவறு ? சிந்திப்போம் செயல்படுவோம் !
முன்புள்ள காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கும் எந்த ஒரு பழமாக இருந்தாலும் சரி எந்த ஒரு காய்கறியாக இருந்தாலும் சரி அதில் தேவையான சத்துக்கள் நிரம்பி இருந்தது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் குழந்தைகளுக்கு எந்த ஒரு பொருள் கொடுத்தாலும் அதில் தேவையான அளவிற்க்கு சத்துக்கள் இருப்பதே இல்லை.இதை நம் குழந்தைகள் அடிக்கடி நோய்வாய் படுவதிலிருந்து அறியலாம்.
குழந்தைகள் அன்றாடம் சாப்பிடும் உணவில் தேவையான அளவிற்கு சத்துக்கள் இல்லாததால் அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் அடிக்கடி அவர்கள் உடல்நிலை குறை ஏற்படுகின்றது. நம் குழந்தைகளுக்கு எத்தகைய சத்தான பொருட்கள் கொடுத்தாலும் அவர்களின் உடலுக்கு அது முழுமையாக சேருவதில்லை. எனவே அவர்களின் உடலில் இரத்த குறைபாடும் ஏற்படுகின்றது.
இதை சரிசெய்ய பின் வருமாறு நாம் செய்ய வேண்டும் ;
குழந்தைகள் காலையில் எழுந்து பின் முதலில் ஒரு டம்ளர் நீர் கொடுக்கவேண்டும். பின்பு தான் வேறு எதையும் கொடுக்கவேண்டும்.
பாக்கெட்டில் விற்க்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு தேவையான சிட்றுண்டியை வீட்டிலேயே ரெடி செய்து தரவேண்டும்.
தினமும் ஒரு பழத்தை குழந்தைகளுக்கு தர வேண்டும்.
வாரம் இரு முறை கீரை சமைக்க வேண்டும்.
இரத்தம் அதிகம் ஊற பீட்ருட் சமைத்து தர வேண்டும்.
இரவில் பால் பருக தரவேண்டும்.