குட்கா ஊழல் வழக்கு ; இன்றும் தொடரும் சிபிஐ சோதனை!
குட்கா ஊழல் வழக்கு தொடர்பாக சிபிஐ தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வரும் நிலையில் , இன்றும் இரண்டாவது நாளாக சோதனை நீடிக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அவற்றை விற்பனை செய்வதற்க்காக டிஜிபி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் , தமிழக அமைச்சர்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் , மத்திய கலால் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றுள்ளதாக புகார்கள் வெளிவந்தது.
இந்த புகார் தொடர்பாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளநிலையில் , இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதை தொடர்ந்து திமுக கட்சியின் எம்எல்ஏ அன்பழகன் குட்கா ஊழல் தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் குட்கா ஊழல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது.
தற்போது காலை சிபிஐ அதிகாரிகள் குட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் , முன்னாள் அமைச்சர் ரமணா , தமிழக டிஜிபி, முன்னாள் டிஜிபி ஜார்ஜ் உள்ளிட்ட முக்கிய நபர்களின் இடத்திலும் , மேலும் தமிழகம் உள்ள 40 இடங்களிலும் நேற்று சிபிஐ திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடரும் என்று தகவல்கள் .வெளியாகியுள்ளன.