மதுரையில் துவங்க உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பம்சங்கள் – மத்திய அரசு விளக்கம்!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும் வரும் 27-ஆம் தேதி அதற்கான அடிகள் நாட்டு விழாவும் நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ.1,258 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 27-ஆம் தேதி நடக்க இருக்கதாகவும் , இந்த அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் மோடி மதுரை வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் சில முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு கட்ட துவங்கப்பட உள்ள இந்த எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல் அளித்த 45 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் 750 படுக்கைவசதிகளுடன் அந்த மருத்துவமனை வடிவமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மருத்துவமனையில் மாதம் ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைபெற முடியும் என்றும் , தினமும் ஆயிரம் பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்ல முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதில் முக்கியமாக கண் மருத்துவம், தோல்நோய் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் என்று 11 வகையான சிறப்பு பிரிவுகளும் , அதோடு இதய நோய் , சிறுநீரக நோய், தீ காயம் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி என 15 உயர்ரக சிறப்பு மருத்துவ பிரிவுடன் அமைக்கப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி ஆயுஷ் எனப்படும் இயற்கை மருத்துவ முறை, அவசர சிகிச்சை பிரிவும் செயல்படவுள்ளது.இந்த மருத்துவமனையில் கலையறங்கம் , இரவில் தாங்கும் வசதிகொண்ட விடுதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.















