fbpx
REஇந்தியா

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மே 29ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவு!

ஹைதராபாத்:

மத்திய அரசு மே 17ஆம் தேதி வரை மட்டும் ஊரடங்கு உத்தரவை நிடித்தது மத்திய அரசு  இந்தநிலையில் தெலுங்கானா மாநில அரசு மே 29-ஆம் தேதி வரை தங்கள் உத்தரவை மாநிலத்தில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் இன்று ஹைதராபாத் தலைநகரில் அளித்த பேட்டியில் இதை அறிவித்தார்

மக்களின் உயிருடன் என்னால் விளையாட முடியாது. தெலுங்கானாவில் நாளுக்குநாள் வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. அதிலும் மொத்த மாநிலத்தில் சுமார் 66 சதவீதம் அளவுக்கு ஹைதராபாத் பகுதியில் பதிவாகியுள்ளது. சமூக பரவல் என்ற அந்த நிலையை அடைந்து விடாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசு அனுமதி கொடுத்து இருந்தாலும், சிவப்பு மண்டல பகுதிகளில் கடைகள் திறக்கப்பட மாட்டாது. இது மது கடைகளுக்கும் பொருந்தும். சிவப்பு மண்டல பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்க கூடிய கடைகள் மட்டுமே இயங்கும். எலக்ட்ரிக்கல், ஹார்டுவேர் மற்றும் சிமெண்ட் கடைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவை மட்டும் திறந்து இருக்கலாம்.

ஹைதராபாத் மக்கள் என் மீதுஅதிர்ச்சி அடையக் கூடும். ஆனால் எனக்கு வேறு வழிதெரியவில்லை. மே 15ம் தேதி வரை நிலைமையைக்பார்த்தபிறகு , அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கும் என சந்திரசேகரராவ் தெரிவித்துள்ளார்.

தெலுங்கானாவில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி புதிதாக 11 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,096 என்ற அளவில் உள்ளது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது அந்த மாநில அரசு.

அதேநேரத்தில், ஒரே நாளில் 500 பேருக்கு மேல் பாதிப்பை பதிவு செய்துவரும், தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு கொண்டுவரப்பட்டு, மதுக் கடைகள் திறக்கப்பட உள்ளது. எனவே, பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும் மற்றும் ஜாக்கிரதையுடன் செயல்பட்டால் மட்டும் தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.

Related Articles

Back to top button
Close
Close