RETamil Newsதமிழ்நாடு
கள்ளக்குறிச்சியில் காதலியை கொலை செய்த காதலன் உள்பட 4 பேர் கைது!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணை கொலை செய்த காதலன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கட்சிராபாளையத்தை சேர்ந்த இளம்பெண் அமராவதியை கடந்த 28ஆம் தேதி முதல் காணவில்லை.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமராவதி அதே ஊரில் உள்ள பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸ் நடத்திய விசாரணையில் அமராவதியின் காதலன் குணசேகரன் குடிபோதையில் நண்பர்களுடன் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்து கிணற்றில் வீசி இருப்பது தெரியவந்துள்ளது.
கொலை உறுதி செய்யப்பட்டதையடுத்து அமராவதியின் காதலன் குணசேகரன் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அமராவதி தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியதால் தான் கொலை செய்ததாக குணசேகரன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.