fbpx
HealthTamil Newsஉணவு

கர்ப்பிணி பெண்களுக்கு சில முக்கிய குறிப்புகள்!

கர்ப்பிணி பெண்கள் தினசரி 2 நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் மிகவும் உடலுக்கு நல்லது. மேலும் அவ்வாறு சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் அது டானிக்காக பயன்படும்.

 

நெல்லிக்காய் , முருங்கக்காய் , முள்ளங்கி ஆகியவற்றை தினமும் கர்ப்பிணி பெண்கள் தங்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வீக்கம் குறையும்.

தினமும் பேரிச்சை பழத்தையும், ஒரு கீரையையும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் எறும்பு சத்து அதிகமாக கிடைக்கும்.

முளைகட்டிய பயிர்வகைகளையும், பழங்களை கர்ப்பிணி பெண்கள் தினசரி சாப்பிட்டு வந்தால் அதன் பலன் கருவில் இருக்கும் சிசுவுக்கு சென்றடையும்.

கர்ப்பகால வாந்திக்கு லவங்கப்பொடியை நேரில் கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து வடிகட்டி பருகி வந்தால் வாந்தி குறையும்.

கருவுற்ற பெண்கள் இளநீரில் பனகற்கண்டு கலந்து குடிக்க சிறு நீர் நன்றாக கழிக்க முடியும்.

மசக்கை நீக்கி பசி உண்டாக மந்தாரை இலையை உலர்த்தி போடி செய்து 2 சிட்டிகை தேனுடன் சாப்பிட்டு வந்தால் மசக்கை நீங்கி பசி உண்டாகும்.

கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக ஆடுதின்னா பாளை வேர் 2 கிராம் எடுத்து போடி செய்து வெண்ணீரில் போட்டு குடிக்க மகப்பேறு வேதனை குறைந்து சுகப்பிரசவம் ஆகும்.

Related Articles

Back to top button
Close
Close