fbpx
RETamil Newsதமிழ்நாடு

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கைவிட கோரிய மனு – உயர் நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை அருகே நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் கடந்த ஆண்டு ஒப்பந்தப்புள்ளிகள் கோரியது. இதையடுத்து டெண்டர் கோரிய ஐந்து நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகளை கணக்கிட்ட ராஞ்சி ஆய்வு மையம் அனைத்து ஒப்பந்தப்புள்ளிகளையும் நிராகரிக்க பரிந்துரைத்தது.

இருப்பினும் இரு நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி ஒரு நிறுவனத்தை சட்டவிரோதமாக தேர்வு செய்ய சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் முடிவு செய்துள்ளதாக கூறி சிங் எலெக்ட்ரிக்கல் என்ற ஒரு நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது டெண்டரில் பங்கேற்காத சிங் நிறுவனம் வழக்கு தொடர எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் சார்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி ராஜா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close