RETamil Newsஅரசியல்தமிழ்நாடு
ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான சொத்துக்குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்குமா?
சிலை கடத்தல் வழக்கை போலவே பன்னீர்செல்வத்தின் சொத்துக் குறிப்பு வழக்கையும் சிபிஐக்கு மாற்றுமா தமிழக அரசு என கேள்வி எழுந்துள்ளது.
துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறி விசாரணை நடத்தக் கோரும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் விரிவாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட பட்டுள்ளது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம், சிலை கடத்தல் வழக்கை போன்று பன்னீர்செல்வம் வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.