fbpx
RETamil Newsதமிழ்நாடு

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த அதிசயம்!

ஈரோடு அருகே இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த ஒரு தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்துள்ளது ஈரோடு அரசு மருத்துவமனையில்.

 

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகேயுள்ளது இலங்கை அகதிகள் முகாம் அங்கு வசிக்கும் விஜயகுமார் (36), பெயிண்டராக பணிபுரிகிறார்.

அவரது மனைவி கலாநி (30), இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் , சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் கருவுற்றிருப்பதை அந்த மருத்துவ நிர்வாகம் உறுதி செய்தது.

மேலும் அவரை ஸ்கேன் எடுத்து பார்க்கும் போது அவரது கருப்பையில் 3 கரு வளர்ந்து வருவதை உறுதி செய்தனர். பின்னர் கலாநி ஈரோடு அரசு மருத்துவமனையில் மாதாந்தோறும் பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.

கலாநிக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவவலி ஏற்பட்டது அதனால் அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் நேற்று காலை தான் அவருக்கு சுகப்பிரசவம் மூலம் ஒரு பெண்குழந்தை பிறந்தது. பின்னர் ஆபரேஷன் மூலம் ஒரு பெண் குழந்தையும் 2 ஆண்குழந்தையும் பிறந்தது.

எனவே
கலாநிக்கு மொத்தம் 4 குழந்தைகள் பிறந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் 7-வது மாத பரிசோதனையில் கலாநியின் கருவில் 3 குழந்தைகள் வளர்த்து வருவதாக ஈரோடு அரசு மருத்துவர்கள் ஸ்கேன் மூலம் சோதித்து கூறினர்.

ஆனால் அவரின் கருவில் 4 குழந்தைகள் வளர்ந்துள்ளது. சுகபிரசவம் மூலம் 1 பெண் குழந்தையும் , ஆபரேஷன் மூலம் ஒரு பெண் குழந்தையும் 2 ஆண்குழந்தையும் பிறந்துள்ளது.

முதலில் சுகபிரசவம் மூலம் பிறந்த பெண் குழந்தை போதுமான எடை கொண்டதாக உள்ளது. ஆபரேஷன் மூலம் பிறந்த 3 குழந்தைகளும் எடை குறைவாக உள்ளதால் இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருகின்றனர் மருத்துவர்கள்.

Related Articles

Back to top button
Close
Close