எளிய கிச்சிடி பகார்யா ரைஸ் செய்வது எப்படி !!
காலையில் குழந்தைகளுக்கு என்ன லஞ்ச் செய்யலாம் என்பது தினம் தோறும் குழப்பமாகவே உள்ளது. ஆனால் குழந்தைகள் விரும்பி ஆசையா சாப்பிடும் ஒரு ஹெல்தியான ஈஸியான லஞ்ச்தான் இந்த கிச்சிடி பகார்யா ரைஸ். முஸ்லிம்கள் எப்போதும் செய்யும் பகார்யாவில் சிறிது சிறு பருப்பு சேர்த்து செய்வது தான் இந்த ரைஸ். இதை எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாமா.
தேவையான பொருட்கள்;
பாஸ்மதி ரைஸ் 1 கப்
சிறுபருப்பு அரை கப்
வெங்காயம் 2
தக்காளி 1
பச்சை மிளகாய் 2
இஞ்சி, பூண்டு பேஸ்ட் 2 ஸ்பூன்
பட்டை,இலவங்கம் ,ஏலக்காய்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
புதினா சிறிது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 4 ஸ்பூன்
முதலில் அரிசி ஊறவைப்பது ;
அரிசி , மற்றும் பருப்பை சேர்த்து இரண்டு தட.வை தண்ணிரில் போட்டு கழுவி பின் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
செய்முறை ;
முதலில் குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில்,சிறிது பட்டை,இலவங்கம் ,ஏலக்காய் சிறிது போட்டு அதில் நறுக்கிய வெங்காயத்தையம், பச்சை மிளகாயையும் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி போட்டும் வதக்கவும், அதன்பின்னர் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கியபின் அதில் நறுக்கிய கொத்தமல்லி , புதினாவை சேர்த்து அதில் சிறிது மஞ்சள் தூள் போட்டு அதில் ஒன்றிற்கு இரண்டு பங்கு தண்ணீர் போட்டு கொதிக்க விட வேண்டும். கொதிப்பு வந்ததும் அதில் ஊறவைத்த அரிசியை போட்டு விசில் போடா வேண்டும்.
ஒரு விசில் வந்ததும் அதை அப்படியே வைத்து விடலாம்.சிறிது நேரம் கழித்து விசில் எடுத்தால் சுவையான
கிச்சிடி பகார்யா ரைஸ் ரெடி.