என்னுடைய ஆதங்கத்தை அப்பாவிடம் தெரிவித்தேன்-மு.க.அழகிரி
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மு.கருணாநிதியின் நினைவிடத்திற்கு நேரில் குடும்பத்தோடு வந்து அஞ்சலி செலுத்தினார் .
இதற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் அனைவரும் தன் பக்கமே உள்ளனர், எனக் கூறினார். காலம் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் கூறினார்.
மேலும் “கட்சி தொடர்பான தனது ஆதங்கத்தை தன் அப்பாவிடம் தெரிவித்துக்கொண்டதாகவும்” கூறினார். தி.மு.க வின் செயற்குழு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் தற்போது தி.மு.க.வில் இல்லை, எனவே தி.மு.க வின் செயற்குழு கூட்டம் பற்றி கூற முடியாது, எனக்கூறினார்.
நாளை தி.மு.க வின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் தலைமை செயற்குழுத் தலைவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைவர் மு. கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் தன் பக்கமே என மு.க. அழகிரி கூறியிருப்பது தி.மு.க. வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.