இந்தியாவில் விமான-டாக்ஸி சேவை -உபர் நிறுவனம் முடிவு!
உபர் நிறுவனம் டாக்சி சேவையை மொபைல் ஆப் மூலம் உலகமெங்கும் நடத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவிலும் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட கால்டாக்சி நிறுவனம் என்ற முத்திரை பதித்துள்ளது. உபர் நிறுவனம் விமான-டாக்சி சேவையை தொடங்க தற்போது 5 முக்கிய நாடுகளை தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது.
உலகின் 5 முக்கிய இடங்களில் உபர் நிறுவனம் ‘உபர் எலிவேட்’என்ற பெயரில், விமான-டாக்சி சேவையை தொடங்க முடிவெடுத்துள்ளது. ஃபிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள அந்த பட்டியலில் இந்தியாவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாகன வசதிகள் குறித்த முதலாவது சர்வதேச மாநாட்டில் பங்குபெற்ற பிரதமர் மோடியிடம் போக்குவரத்து துறையில் ‘உபர் எலிவேட்’ கொண்டுவர இருக்கும் முக்கிய மாற்றம் குறித்து எடுத்துரைத்ததாக அலிசன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இரு நகரங்களில் உபர் நிறுவனம் விமான-டாக்ஸி சேவையை முதற்கட்டமாக தொடங்க முடிவெடுத்துள்ளது.
இதற்கடுத்து இந்தியாவின் மும்பை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட 3 நகரங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க உபர் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.