இத்தாலி தொங்கு பால விபத்து ; 20 பேர் பலி!
இத்தாலியின் வட மேற்கில் அமைந்துள்ளது ஜெனோய நகரின் தொங்கு பாலம் அதில் பெரும் பகுதி இடிந்ததால் இதுவரை 20 பேர் பலியானதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.
இத்தாலியை சேர்ந்த தொங்கு பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததுடன் அதில் சென்ற பல்வேறு கார்களும் , லாரிகளும் கீழே விழுந்து சுக்குநூறாக உடைந்தது.மேலும் அதில் சிக்கி 20 பேர் பலி.ஆகியிருக்கலாம் என்று
தகவல். பலர் காயமடைந்துள்ளனர் அவ்வாறு காயமடைந்தவர்களை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த இடிபாடுகளில் சிக்கி யாராவது இருக்கிறார்களா என்று கண்டறிய அவசர கால ஊழியர்களும் , மோப்ப நாய்களும் களம் இறங்கி உள்ளனர்.
இடிந்த தொங்குபாலத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்
இந்த பாலம் 1960-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த பாலத்தினை சீரமைத்தனர். அப்படி இருந்தும் இந்த பாலம் இடிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.