Tamil Newsஉணவு
ஆப்பிள் பஜ்ஜி செய்வது எப்படி!
தேவையான பொருட்கள் ;
ஆப்பிள் 2
கடலை மாவு கால் கிலோ
அரிசி மாவு 5 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை 2 டீஸ்புன்
சமையல் சோடா சிறிதளவு
ஏலக்காய் தூள் சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவைக்கேற்ற அளவு
செய்முறை ;
முதலில் ஆப்பிள் பழங்களை மெலிதாக நீளவாக்கில் வெட்டி கொள்ள வேண்டும்.
பின்னர் வெந்நீரில் சர்க்கரையை போட்டு பாகுவாக்கி அதனுடன் ஏலக்காய் பொடியை சேர்த்து கொள்ளவேண்டும்.
அரிசி மாவு,கடலை மாவு, சமையல் சோடா , உப்பு , சர்க்கரை பாகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். குறிப்பாக பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு தய்யார் செய்த பஜ்ஜி மாவு கரைசலில் ஆப்பிள் துண்டுகளை முக்கி கொதிக்கும் எண்ணையில் போட்டு பொறித்து எடுக்க வேண்டும்.
இப்பொழுது சுவையான ஆப்பிள் பஜ்ஜி ரெடி.