fbpx
RETamil News

மோடியின் வெளிநாட்டு பயணச்செலவு ரூ.2,012 கோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மோடி சொந்த நாட்டில் இருப்பதை விட வெளி நாட்டில்தான் அதிக நேரம் செலவிடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு எம்.பி. பினோய் விஸ்வம் பாராளுமன்ற மேல்-சபையில் பேசுகையில், “பிரதமர் மோடி தான் பதவியேற்ற பிறகு எந்தெந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். எத்தனை முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதற்கான செலவு எவ்வளவு செய்யப்பட்டு இருக்கிறது” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே.சிங் கூறியதாவது:-

பிரதமர் மோடி கடந்த 4 ஆண்டுகளில் 84 முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்று உள்ளார். இதற்காக அரசுக்கு ரூ.2,012 கோடி செலவாகி இருக்கிறது. மோடி பயணம் செய்த தனி ஏர்இந்தியா விமானத்துக்கு பராமரிப்புக்கு மட்டும் ரூ.1,583 கோடி செலவு செய்யப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close