fbpx
GeneralRETamil Newsஅரசியல்இந்தியா

மாஸ்க் இல்லாவிட்டால் 1000 ரூபாய் அபராதம்…! முதலமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!

Without Mask rs.1000 fine in Gujarat

அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ. 500விதிக்கப்பட்ட அபராதத் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் மத்திய அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஒன்று ஊரடங்கு. மேலும், மத்திய ,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முகக்கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு  ரூ.200 அபராதம் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அபராதம் விதித்தும் பலர் முக கவசம் அணியாமல் இருந்ததால், மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் என கூறப்படுகிறது.

இதையடுத்து ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 என அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில்,  குஜராத் மாநிலத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ. 500 விதிக்கப்பட்ட அபராதத் தொகை 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close