fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

சென்னையில் விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டம்…! முதல்வர் தொடங்கி வைப்பு!

CM edapaddi palanisamy mask distribution

சென்னை:

விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது,  தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா இரண்டு மாஸ்க் வழங்கப்படும் என கூறினார்.

அதன்படி, தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 குடும்ப உறுப்பினர்களை கொண்ட 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு தலா ரேஷன்காடுக்கு 2 மாஸ்க் என்ற வகையில் 13  கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மாஸ்க் வாங்க முடிவு செய்யப்பட்டது. 6 பேர் கொண்ட விலை நிர்ணய குழுவை அரசு அமைத்தது. தற்போது, மாஸ்க் கொள்முதல் முடிந்துள்ளது.

இந்நிலையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து விலையில்லா முகக்கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக கிராமப் புறங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு  விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளன.

சென்னையை தவிர பிற மாவட்டங்களில் வசிக்கும் 69.09 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.4.44 கோடி முகக்கவசங்கள் வழங்கப்படவுள்ளது. நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close