உடுமலை சங்கர் படுகொலை மேல்முறையீடு வழக்கு…! இன்று ஹைகோர்ட் தீர்ப்பு!
Udumalai sankar case judgement

சென்னை:
உடுமலை சங்கர் மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்கின்றனர்.
வெவ்வேறு சாதியை சேர்ந்த கௌசல்யாவும், சங்கரும் 2015-இல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
2016 மார்ச் 13ல் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 6 பேருக்கு திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.
கௌசல்யா தந்தை உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
தண்டனைக்கு எதிராக 6 பேரும், 3 பேர் விடுதலையை எதிர்த்து காவல்துறையும் மேல்முறையீடு செய்திருந்தது.
இந்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
















