fbpx
RETamil Newsஇந்தியாஉலகம்தமிழ்நாடு

இணைய பதிவு வசதி உருவாக்கிய தமிழக அரசு

TN govt creates new website for Tamilnadu NRI's

இந்தியா முழுவதும் , கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25-03-2020 முதல் அமலில் இருந்து வருகிறது .

இதனால் , சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன . இதனால் , தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் , சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் , பணியாளர்கள் உள்ளிட்டோர் நம் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது .

அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில் , உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்களின் நலனுக்காகவும் , அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும் , அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும் , தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும் , அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காகவும் இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது .

வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றும் அதன் மூலம் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அழைத்து வர முடியும் என்று கூறியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close