RETamil NewsTrending Nowதமிழ்நாடு
தமிழகத்தில் நகர் பகுதிகளிலும் சலூன் கடைகளை நாளை முதல் திறக்க அனுமதி..!
Tn government allows Salon opening

சென்னை:
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருக்கிறது.
மார்ச் 25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது கடைகளும் மூடப்பட்டன. தற்போது 4ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கு மட்டும் அனுமதி தரப்படவில்லை. இந் நிலையில் தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
சென்னையில் சலூன் கடைகளை திறக்க அனுமதியில்லை. சென்னை தவிர பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.















