சென்னையில் இப்படித் தான் கொரோனா பரவுதா…? ஒரு வழியாக கண்டுபிடித்த மாநகராட்சி!

சென்னை :
மற்ற பகுதிகளை விட சென்னையில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 60 சதவீதம் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்படுவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்று நாள்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,271 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,213 பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் பாதிக்கப்பட்ட 332 போரில் 238 பேர் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள். 94 பேர் கட்டுப்பாடு இல்லாத பகுதியில் வசிப்பவர்கள்.
இதன்படி பார்த்தால் சென்னையில் 60 சதவீத பாதிப்புகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்படுவது தெரிய வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி கூறி இருக்கிறது.
மண்டலம் வாரியாக பார்க்கும்போது ராயபுரத்தில் 1112 பேர் , கோடம்பாக்கத்தில் 973 பேர் திருவிக நகரில் 750 பேர் தேனாம்பேட்டையில் 669 பேர், தண்டையார்பேட்டையில் 528 பேர், அண்ணாநகரில் 514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளசரவாக்கத்தில் 494 பேர்,அடையாரில் 334 பேர் , அம்பத்தூரில் 304 பேர், திருவொற்றியூரில் 137 பேர் மாதவரத்தில் 105 பேர், மணலியில் 84பேர், சோழிங்கநல்லூரில் 82 பேர்,பெருங்குடியில் 80 பேர், ஆலந்தூரில் 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 60.84 சதவீதம் ஆண்கள், 39.12 சதவீதம் பெண்கள். திருநங்கைகள் 3 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர்.















