fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

திருவள்ளூர் திகில்…! ஒரே நாளில் கொரோனாவால் என்ன நடந்தது தெரியுமா?

Thiruvallur Corona cases latest

திருவள்ளூர்: திருவள்ளூரில் கோயம்பேடு சந்தைக்கு சென்று வந்த 120 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தீவிரம் காரணமாக12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. கிட்டத்தட்ட 6 ஆயிரத்து 9 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

சென்னையில் மிக கடுமையான பாதிப்பு காணப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது கோயம்பேடு சந்தை. இந்த சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள், வாங்கிச் செல்ல வந்த பொதுமக்கள் என பலருக்கு தொற்று பரவியுள்ளது.

கோயம்பேடு சந்தை வந்து விட்டு சொந்த ஊர் சென்ற கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவள்ளூர் என மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறது. அந்த வகையில், திருவள்ளூரில் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய 120 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

ஆகையால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, திருவள்ளூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி 44ல் இருந்து 110ஆக உயர்ந்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close