RETamil Newsஇந்தியாதமிழ்நாடு
கேரளாவில் திருடிய பொருட்களை திருப்பி கொடுத்து மன்னிப்புக் கோரிய திருடன்
கேரளாவில் கொள்ளையன் ஒருவன் திருடிய பொருட்களை அதன் உரிமையாளரிடமே திரும்ப அளித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.அத்துடன் மன்னிப்பு கோரும் கடிதத்தையும் வழங்கியுள்ளார்.
ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கருமணி என்ற பகுதியில் மதுகுமார் என்பவரின் வீட்டில் கடந்த புதன்கிழமை ஒரு சவரன் நகை காணாமல் போயுள்ளது. இதுதொடர்பாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஆனால் எதிர்பாராத நிகழ்வாக அடுத்த நாள் காலை மதுகுமார் வீட்டில் கொள்ளையடித்த நகையும் உடன் மன்னிப்புக் கோரும் கடிதமும் கிடந்துள்ளது. அதில் ” என்னை மன்னித்துவிடுங்கள் சூழ்நிலை காரணமாக நான் கொள்ளையடித்துவிட்டேன் இனி இதுபோல நடந்து கொள்ள மாட்டேன் என்றும் காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டாம் என்றும் நகை கொள்ளை அடித்தவர் கேட்டுக்கொண்டுள்ளார்.