fbpx
RETamil Newsதமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலையில் இன்று கனமழை அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது – சென்னை வானிலை ஆய்வு மையம்

The Western Ghats today are likely to be heavy rain today - Chennai Meteorological Center

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தற்போது பெய்து வருகிறது.

சென்னையிலும் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, நெல்லை, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலையோரப் பகுதிகளில் கனமழை மற்றும் மிககனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close