fbpx
BusinessRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத சரிவு : 69 ஐ தொட்டது!!!

மும்பை : சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மிக கடுமையாக சரிவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது. இருப்பினும் சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 69 என்ற நிலையை எட்டியது.

இதற்கு முன் ஜூன் 19 ம் தேதி அன்று 68.61 என்ற அளவிற்கு சரிந்தது மிகப் பெரிய சரிவாக பார்க்கப்பட்டது.

ஆனால் ஜூன் 19 க்கு பிறகு தற்போது மிக கடுமையாக சரிந்துள்ளது.

நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 68.61 ஆக இருந்தது. 2018 ம் ஆண்டில் இது வரை இந்திய ரூபாய் மதிப்பு 8 சதவீதத்திற்கும் மேல் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close