உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி படித்த கல்லூரி அதிமுகவின் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமானது
The deceased student Lokeswari studied college Lok Sabha Deputy Lok Sabha Speaker Thambithurai
கோவை நரசிபுரத்தில் செயல்பட்டுவரும் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் லோகேஸ்வரி என்ற மாணவி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரியில் மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தபோது இரண்டாவது மாடியிலிருந்து லோகேஸ்வரியை குடதிக்க சொல்லி பயிற்சியாளர் ஆறுமுகம் கீழே தள்ளியுள்ளார்.
அப்போது நிலை தடுமாறி முதல் மாடியில் இருந்த சன்ஷேடின் மேலே விழுந்த லோகேஸ்வரி பலத்த காயமுற்று உயிரிழந்ததை அடுத்து பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கோவை கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிச்சியாளர் ஆறுமுகம் தங்களிடம் அங்கீகாரம் பெற்றவர் இல்லை என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்கமளித்துள்ளது.
போலிச் சான்றிதழ்கள் மூலம் ஆறுமுகம் கல்லூரியில் பணி செய்துள்ளார் என்றும் மாணவி உயிரிழப்புக்கு பயிற்சியாளராக முகமே முழு காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.
ஆனால் ஆறுமுகத்தை பணிக்கு சேர்த்த கல்லூரி மீது என்ன நடவடிக்கை என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான கலைமகள் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக தம்பிதுரையின் மனைவி பானுமதி பதவி வகிக்கிறார். தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்து விவரம் பட்டியலில் கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.