டோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத பேய் மழைக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.
ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தில் கடந்த மூன்று நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.
வெள்ளத்தில் பலர் அடித்து செல்லப்பட்டனர். நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ளனர். ஏராளமான கார்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளதாக ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஏராளமானோர் மாயமாகியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது.