fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.

காமராஜரின் இன்று 117-வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில்
காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் இன்று முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் சமத்துவ கட்சியின் தலைவராக உள்ளார் சரத்குமார் அவர்கள் அவர் தன சொந்த செலவில் காமராஜர் மணிமண்டபத்தை கட்டியுள்ளார். அதைத்தான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி கட்சி மூலம் திறந்து வைத்தார்.

விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜர், கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை சார்பில் அதன் அறக்கவளரும், சமத்துவ கட்சியின் தலைவருமான சரத்குமார் அவர்களும் காமராஜருக்கு மணிமண்டபத்தை அமைத்துள்ளனர்.இந்த மணிமண்டபமானது ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவின் போது , காணொளி காட்சி மூலம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.

இந்த திறப்பு விழாவில் சமத்துவ கட்சியின் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார், பாஜக தமிழக தலைவர் சொவுந்தரராஜன் மற்றும் தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close