தொழில் நிறுவனங்களை அனுமதிக்கலாமா?:தமிழக அரசு இன்று ஆலோசனை!
Tamilnadu Chief minister edapaddi palanisamy discussion

சென்னை:
4ம் கட்ட ஊரடங்கு தொடர்பாக தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
3ம் கட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதியுடன் முடிகிறது. 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இது பற்றி அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
4ம் கட்ட ஊரடங்கிலும் தொழில் நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். அதன்படி, முக்கிய நடவடிக்கையாக தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சங்க நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
தலைமை செயலகத்தில் மாலை 5 மணிக்கு காணொலி வழியாக ஆலோசனை நடத்துகிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.















