fbpx
RETamil Newsதமிழ்நாடு

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது .

சிலை கடத்தலை தடுக்க கோரி ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது 2021ல் ஆயிரம் கோயில்களில் பாதுகாப்பு அறைகள் கட்டப்படும் என நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

அப்போது பேசிய நீதிபதி மகாதேவன் கோயில்களில் சிலை பாதுகாப்பு அறை கட்ட 2021 வரை அவகாசம் அளிக்க முடியாது என்றும், 2021 ஆம் ஆண்டு வரை அவகாசம் தந்தால் எஞ்சியுள்ள சிலைகளும் திருடப்படும் என்றும் தெரிவித்தார்.

காவல்துறையுடன் ஆலோசித்து பாதுகாப்பு அறைகளை விரைவாக கட்டி முடிப்பது பற்றிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறினார். சிலைகளுக்கான பாதுகாப்பு அறைகளில் மெத்தனம் தொடர்ந்தால் தலைமைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி மகாதேவன் எச்சரிக்கை விடுத்தார்.

Related Articles

Back to top button
Close
Close