fbpx
GeneralRETamil Newsஇந்தியா

ரயில் முன்பதிவு செய்த 11.97 லட்சம் பயணிகளுக்கான தொகை ஒப்படைப்பு…! தெற்கு ரயில்வே தகவல்!

Train ticket cancellation refund says southern railway

டெல்லி:

கொரோனா ஊரடங்கின் போது ரயில் முன்பதிவு செய்திருந்த 11.97 லட்சம் பயணிகளுக்கான முன்பதிவு தொகையை தெற்கு ரயில்வே திரும்ப அளித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த மார்ச் 22ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ள அனைத்து ரயில்களுக்கான முன்பதிவு கட்டணங்களை 100 சதவீதம் திரும்ப அளிக்க தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதன்படி தென்னக ரயில்வேயின் அனைத்து மண்டலங்களில்உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள பி.ஆர்.எஸ் கவுண்டர்கள் மூலம் பயணிகளுக்கு முன்பதிவு கட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில், டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல், சென்னை எக்மோர், திருச்சிராப்பள்ளி சந்திப்பு, தஞ்சாவூர், கும்பகோணம், சேலம், கருர், கோயம்புத்தூர், மதுரை திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் பல முக்கிய இடங்களில் கடந்த ஜூன் 1 -ம் தேதி முதல் பயணிகள் முன்பதிவு பணத்தைத் திரும்பப் பெற பி.ஆர்.எஸ் கவுண்டர்கள் திறக்கப்பட்டன.

இதுவரை 64 கோடியே 49 லட்சம் ரூபாயை தெற்கு ரயில்வே திரும்ப அளித்துள்ளது. மொத்தமாக 11 லட்சத்து 97 ஆயிரம் பயணிகள் தங்கள் முன்பதிவு கட்டணத்தை திரும்ப பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close