கர்நாடகத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை தற்க்காலிக சபாநாயகர் நடத்தலாம்: சுப்ரீம்கோர்ட் உத்தரவு !!
எடியூரப்பா மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை தற்காலிக சபாநாயகர் போபையா நடத்த சுப்ரீம்கோர்ட் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே கர்நாடகா சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டபேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிப்பரப்பு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
கர்நாடக தற்காலிக சபாநாயகர் போபையாவுக்கு எதிரான மனு மீதான விசாரணை தொடங்கியது. கர்நாடக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கே.ஜி போப்பையாவை ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று நியமித்தார். ஆளுநர் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவசர மனுவை காங்கிரஸ், மச்சார்பற்ற ஜனதா தளம் தாக்கல் செய்தது, இதனைத் தொடர்ந்து இந்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன், எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வருகிறது.