கொரோனா லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது..! என்று அமைச்சர் செல்லூர் ராஜு ‘கலகல’
Sellur raju cured from corona

மதுரை:
கொரோனா என்னை லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது என்று அமைச்சர் செல்லூர் ராஜு நகைச்சுவையுடன் கூறினார்.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று ஏற்பட்டு வந்த நிலையில், தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 17ம் தேதி அவர் கொரோனாவில் இருந்து மீண்டார். அண்மையில் இவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:
கொரோனா என்னை லைட்டாக டச் செய்து சென்றுவிட்டது. எனக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருந்தது. பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நான் நலமுடன் இருக்கிறேன்.
எனக்காக பலர் பிரார்த்தனை செய்தனர். என் குடும்பத்திற்காக பலர் வேண்டி கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் தற்போது நலமுடன் இருக்கிறேன் என செல்லூர் ராஜு பேசியுள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்ட அமைச்சர் செல்லூர் ராஜூக்கு மதுரை கோரிப்பாளையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடி அவரை வரவேற்றனர்.
















