fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ரூ.2000….!முதலமைச்சர் அறிவிப்பு!

Rs.2000 for saloon employees

சென்னை:

முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.2000 நிதியுதவி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 51 நாட்களை கடந்துள்ளது. நாளையுடன் ஊரடங்கு முடிகிறது. மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும்.

நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில்  இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும் என்று நாட்டு மக்களுடன் உரையாற்றியபோது பிரதமர் மோடி தெரிவித்தார்.

ஊரடங்கால், பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 50 நாட்களுக்கும் மேல் சலூன் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில்,  முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். அவர்கள் நிவாரண தொகை பெற விஏஓ, பேருராட்சி நிர்வாக அலுவலர், மாநகராட்சி மண்டல அலுவலரிடம் மனு அளிக்க வேண்டும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close