ஊரடங்கு அபராதம் ரூ.10 கோடியை தாண்டியது…! காவல்துறை தகவல்!
Rs.10 Crore penalty for lockdown overrule regulation

சென்னை:
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,82,877 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 மணி நேரத்தில் மட்டும் 4777 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஊரடங்கை மீறியதாக 4,48,456 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 24 மணி நேரத்தில் 3200 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக இதுவரை, 5,44,566 வழக்குகளும், ரூ.10,21,80,599 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 4232 வழக்குகளும், ரூ..22,94,160 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 30 நிமிடத்திற்கு ஒரு முறை 10 நபர்களுக்கு வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
கடந்த 24ம் தேதி முதல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட வரிசை படி உரிமையாளர்களுக்கு வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல், ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.















