fbpx
ChennaiRETamil Newsதமிழ்நாடு

சென்னையில் கொரோனா தொற்றில் இந்த ஏரியா தான் பர்ஸ்ட்…! லிஸ்ட் போட்ட மாநகராட்சி

Royapuram zone records highest corona case

சென்னை: சென்னையில் 828 கொரோனா தொற்றுடன் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் இருக்கிறது.

தலைநகர் சென்னையில் சில நாட்களாக நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்று கொண்டிருக்கிறது.

இந் நிலையில் சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள கொரோனா தொற்றுகள் எவ்வளவு என்ற தகவலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி 828 கொரோனா நோயாளிகளுடன் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது.

2ம் இடத்தில் கோடம்பாக்கம் 796 பேருடன் இருக்கிறது. 3வது இடத்தில் உள்ள திரு.வி.க. நகர் மண்டலத்தில் 622 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.4வது இடத்தில் உள்ள தேனாம்பேட்டை மண்டலத்தில் 522 பேருக்கு கொரோனா இருக்கிறது.

5வது இடத்தில் வளசரவாக்கம் மண்டலத்தில் 426 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 362 பேருக்கும், அடையாறில் 267 பேருக்கும், அம்பத்தூரில் 234 பேருக்கும், திருவொற்றியூரில் 118 பேருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close