fbpx
GeneralRETrending Nowஅரசியல்இந்தியா

நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு…! உண்மையை ஒப்புக் கொண்ட பிரதமர் மோடி!

Ram temple construction imitated bu PM Modi

அயோத்தி:

நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவிலும் கலந்து கொள்ள பிரதமர் மோடி டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். லக்னோ விமான நிலையம்  சென்றடைந்த மோடி  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தடைந்தார்.

அயோத்தி வந்த பிரதமர் மோடியை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் வரவேற்றனர். இதன் பின் அயோத்தி ராமஜென்ம பூமி பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ராமஜென்ம பூஜையில்  40 கிலோ எடையுள்ள வெள்ளியிலான செங்கலை அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. பின்னர் அவர் பேசியதாவது: ராமர் கோவிலுக்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் களத்தில் இறங்கி போராடினர். இந்தியர்களின் தியாகம், போராட்டம் காரணமாக ராமர் கோவில் எனும் கனவு நனவாகியுள்ளது. ராமர் கோவிலுக்காக போராடிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேபாளத்திற்கும் ராமருக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொடர்பு உள்ளது. கடமையே முக்கியம் என கற்பித்தவர் ராமர். ராமர் அனைவருக்கும் பொதுவானவர். முஸ்லீம்கள் அதிகம் வாழும் இந்தோனேஷியாவில் பல ராமாணயங்கள் பயன்பாட்டில் உள்ளன.

ராமர் கோவில் அமைய உள்ள பிரதேசத்தின் பொருளாதாரம் மேம்படும் .அயோத்தி மிகப்பெரிய மாற்றத்திற்கு தயாராகி வருகிறது .அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும்.அயோத்தி ராமர் கோவில் ஒற்றுமைக்கு ஒரு பாலமாக அமையும் என்று பேசினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close