fbpx
RETamil Newsஇந்தியா

தெலங்கானா டூ ஜார்க்கண்ட் சிறப்பு ரயில்!

Railways operates special train from Telangana to Jharkhand for migrant workers

பொது முடக்கத்தால் தெலுங்கானாவில் சிக்கிக்கொண்ட தொழிலாளர்களை ஜார்க்கண்ட் மாநிலம் நோக்கி ஏற்றிக்கொண்டு சென்றது சிறப்பு ரயில். வெகு நாட்கள் கழித்து மக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

கொரோனா தொற்று பாதிப்பினால் உலகமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றது. வெளியூர்களுக்கு வேளைக்கு சென்றவர்களும் ஆங்காங்கே முடங்கி கிடக்கின்றனர். வருமானம் ஏதும் இல்லாததால் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில்,தெலங்கானாவில் சிக்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுமார் ஆயிரத்து இருநூறு பேர் சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். சுமார் 24 ரயில் பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் தெலங்கனாவின் லிங்கம்பள்ளி என்ற பகுதியில் இருந்து ஜார்கண்டின் ஹாதியா பகுதிக்கு தொழிலாளர்களை ஏற்றி சென்றது.

ரயில் புறப்படும் மாநிலமும் ,சென்றடையும் மாநிலமும் கோரிக்கை விடுத்ததால்,ரயில்வே அமைச்சகத்தின் ஒப்புதலின் பேரில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close