RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு
மாநிலத்திற்கு ஒரு முடிவெடுக்கும் ஆளுநர்கள்.. இந்தியாவில் அரசியல் சாசன சிக்கல்கள் ஏற்பட உள்ளது …ராகுல் பாய்ச்சல்!!!
இந்தியா முழுக்க அரசியல் சாசன சிக்கலை உருவாக்கிவிட்டது கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவின் செயல்பாடு.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பதா, பெரும்பான்மைக்கு தேவைப்படும் இடங்களை கொண்டுள்ள காங்கிரஸ்-மஜத கூட்டணியை அழைப்பதா என்ற தன் முன்பாக இருந்த இரு வாய்ப்புகளில், முதலாவதை தேர்ந்தெடுத்துள்ளார் ஆளுநர்.
இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் படியேறியுள்ளது காங்கிரஸ். ஆளுநரின் இந்த முடிவு இப்போது தேசிய அளவில், பெரிய அரசியல் சாசன பிரச்சினைகளுக்கு வித்திட்டுள்ளது.