சென்னை உட்பட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் சில இடங்களில் மழை பெய்யும்.
அதேபோல் இரவு நேரத்தில் கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்கள் முழுக்க மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இந்த வானிலை நாளையும் தொடர வாய்ப்பு என்று கூறப்படுகிறது. கடலோர மாவட்டங்களில் காற்று அதிகமாக வீசும்.