முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் போடலாம்…! டாக்டர் ராமதாஸ் ‘நச்’ யோசனை!
PMK Founder ramadoss twitter message about corona fine

சென்னை:
சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார்.
தமிழகத்தில் நாள் தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ், சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டர் பதிவிட்டுள்ளதாவது :
சென்னையில் முகக்கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்பட்டும், மக்களிடம் விழிப்புணர்வு வரவில்லை. அதனால் அபராதத்தை ரூ.1000 ஆக உயர்த்தினால் கூட தவறில்லை என்று தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மற்றொரு பதிவில், கொரோனா நோய்ப்பரவல் குறித்து எதுவும் தெரியாமல், எல்லாம் தெரிந்தவர்களைப் போல காட்டிக் கொள்வதற்காக சமூக ஊடகங்களில் வதந்திகளையும், பீதிகளையும் பரப்புபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் எல்லை மீறும் போது கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்! என்று தெரிவித்துள்ளார்.
















