fbpx
REஉலகம்

பனாமா ஊழல் வழக்கு:பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பத்து ஆண்டு சிறை!

பனாமா கேட் ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறைதண்டனையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பனாமா கேட் ஊழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்,மற்றும்  அவரது குடும்பத்தினரும் சிக்கினர். இது தொடர்பாக அந்நாட்டின் உச்சநீதிமன்றம்  ஜே.ஐ.டி. என்னும் கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட்டது.

விசாரணை முடிவில் நவாஸ் ஷெரீப்பை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், இந்த ஊழல் வழக்கு விசாரணையை ஊழல் ஒழிப்பு நீதிமன்றம் விசாரிக்க  வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

விசாரணை முடிவில் நவாஸ் ஷெரீப்புக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியம் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், மருமகன் கேப்டன் சப்தருக்கு ஒரு வருட சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியது. தற்போது நவாஸ் ஷெரீப் குடும்பத்தாருடன் லண்டனில் தங்கியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close