fbpx
REஉலகம்

தரையில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் விமானம்-நடந்தது என்ன?

Pakistan plane crashes at residential area in Karachi

பாகிஸ்தானில் உள்ள லாகூர் விமான நிலையத்திலிருந்து கராச்சி நோக்கி சுமார் 91 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது ஏர்பஸ்-320 ரக விமானம்.

இந்த விமானம் கராச்சியில் தரையிறங்க முயன்றபோது ஜின்னாஹ் கார்டன் என்ற இடத்தில எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் இன்னும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.

தற்பொழுது சுமார் 45 சடலங்களை மீதுள்ளதாகவும் இருவர் மட்டும் இந்த விபத்தில் இருந்து பிழைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப்பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு மக்களை தேடும் பணியில் முனைந்துள்ளார்.

பாகிஸ்தான் தனது நாட்டில்  தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்த விமான சேவையை தொடங்கிய அடுத்த நாளே இந்த சம்பவம் நடந்துள்ளதால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விமான விபத்து மக்களிடையே அதிர்ச்சி மற்றும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் நடந்துவருகிறது, விபத்தில் இறந்த அனைத்து நபர்களின் குடும்பங்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close