fbpx
GeneralRETrending Nowஅரசியல்இந்தியா

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமான சேவை தடை….!

No flight services from 6 cities says mamta banerjee

கொல்கத்தா:

சென்னை உள்பட 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு வருகிற 31ந்தேதி வரை மேற்கு வங்க அரசு தடை விதித்து உள்ளது

நாடு முழுவதும் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  எனினும், குணமடைந்தோர் விகிதம் உயர்ந்து வருகிறது என அரசு ஆறுதல் தெரிவித்து உள்ளது.  நாட்டில் கொரோனா பாதிப்புகளில் மராட்டியம் முதல் இடத்தில் உள்ளது.  அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளது.

இதேபோன்று மகாராஷ்ரராவில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களிலும், தமிழகத்தின் சென்னையிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.

இந் நிலையில், மேற்கு வங்க அரசு வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா பாதிப்புகள் அதிகளவில் உள்ள நகரங்களில் இருந்து (டெல்லி, மும்பை, புனே, நாக்பூர், சென்னை மற்றும் அகமதாபாத்) கொல்கத்தாவுக்கு விமானங்கள் வருவதற்கான தடை வரும் 31ந்தேதி வரை தொடரும் என தெரிவித்து உள்ளது.

இதற்கு முன் கடந்த ஜூலை 17ந்தேதி இதேபோன்று தடை விதித்து மேற்கு வங்க அரசு சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியானது.  அதன்பின்னர் கடந்த ஜூலை 30ந்தேதி விமானங்களின் வருகைக்கு தற்காலிக தடை விதித்து மாநில அரசு சார்பில் மற்றொரு அறிவிப்பு வெளியானது.

Tags

Related Articles

Back to top button
Close
Close