RETamil Newsஇந்தியா
இனி தேர்தலில் போட்டியில்லை: சித்தராமையா திடீர் முடிவு!!!
மைசூரு:
இனி நடக்க உள்ள தேர்தல்களில் போட்டியிட போவதில்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.மைசூருவில் நிருபர்களிடம் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
தற்போது தான் போட்டியிட்ட தேர்தல்தான் கடைசி தேர்தல். இனிவரும் தேர்தல்களில் போட்டியிட போவதில்லை. ஆனால், அரசியலில் தொடர்ந்து பணியாற்றுவேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை கர்நாடக முதல்வராக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்பினால், அதற்கு ஆட்சேபனை இல்லை. கட்சியின் மேலிட முடிவுக்கு நான் கட்டுப்படுவேன். இதுவரை ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.