fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

டாஸ்மாக் திறந்ததில் என்ன தப்பு..? ஸ்டாலினை காய்ச்சும் அமைச்சர்

Minister udumalai radhakrishan condemns stalin

சென்னை: டாஸ்மாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கண்டித்துள்ளார்.

கடந்த மார்ச்சில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு வரும் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன.

இந்நிலையில் ஏறக்குறைய 42 நாட்கள் கழித்து சென்னை உள்ளிட்ட சில பகுதிகளை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

அரசின் இந்த நடவடிக்கைகக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சியில் மக்களுக்கு அத்யாவசிய பொருட்கள் வழங்கிய அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: மற்ற மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் பலர் மது வாங்க வெளிமாநிலங்களுக்கு செல்லும் அபாயம் உள்ளது. அதை கருத்தில் கொண்டே தமிழக அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது.

மக்களுக்கு என்ன நன்மை செய்தாலும் போராட்டங்கள் நடத்தி மக்களை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுவதே எதிர்க்கட்சிகள் வேலை. அதை தான் இப்போது செய்ய முயல்கின்றன என்றார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close