மதிப்பெண்களில் தில்லுமுல்லு..! தனியார் பள்ளிகளை கடுமையாக எச்சரித்த அமைச்சர்…!
Minister sengottaiyan warning to all private schools

சென்னை:
10ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்யும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்றால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தாகி உள்ளன. மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீதமும், வருகைப்பதிவு அடிப்படையில் 20 சதவீதமும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் பல தனியார் பள்ளிகளில் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதால் தற்போது மதிப்பெண் பதிவு பட்டியல் மட்டுமே உள்ளது என் கூறியது.
இந்நிலையில் மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தேர்ச்சி ஆகவில்லை என்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவர்களுக்கு என்ன மதிப்பெண் அளிப்பது என்று புரியாமல் ஆசிரியர்கள் குழம்பி உள்ளனர்.
அதன் காரணமாக சில முறைகேடுகளும் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, 10ம் வகுப்பு மதிப்பெண்களில் குளறுபடி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் எவ்வித பாராபட்சமும் பார்க்கபடாது என்று அமைச்சர் செங்கோட்டையன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
















