GeneralRETamil Newsதமிழ்நாடு
மதுரையில் உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு…! 11 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி!
Madurai corona cases crosses 11000

மதுரை:
மதுரையில் இன்று மேலும் 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 11,073 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் மதுரையில் இன்று மேலும் 235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 11,073 ஆக அதிகரித்துள்ளது.
















