முதலமைச்சரிடம் பேசுகிறேன்..! குஷ்புவின் கோரிக்கை பற்றி அமைச்சர் பதில்

சென்னை: சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரலாமா? கூடாதா? என்பது பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு இன்னமும் அமலில் இருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக திரைப்படங்கள், சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பெரியதிரையில் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்று இயக்குநர் செல்வமணி ஏற்கனவே தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந் நிலையில், சின்னத்திரை பணியை தொடங்க அனுமதி கோரி நடிகை குஷ்பு, சுஜாதா விஜயகுமார் ஆகியோர் அமைச்சர் செல்லூர் ராஜூவை சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
இதனை தொடர்ந்து சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தருவது பற்றி முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். அதேபோல திரைப்படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி தரலாமா என்பது பற்றியும் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.















