fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

கேரளாவை உலுக்கிய தங்கம் கடத்தல்..! தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதாக அறிவிப்பு!

Kerala gold case, nia enquiry

திருவனந்தபுரம்:

கேரளாவை உலுக்கியுள்ள தங்கம் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த கடத்தலின் பின்னணியில் மிகப்பெரும் புள்ளிகள் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.

வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், அவரது கூட்டாளியின் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ் என்ற பெண் இந்தக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார்.

தலைமறைவாக இருக்கும் அவரையும், அவரது நண்பரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. முன்னதாக இந்த கடத்தல் விவகாரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் மீதும் குற்றச்சாட்டுகள் கிளம்பியது.

எனவே அவர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் இந்த கடத்தல் சம்பவத்தில் பினராயி விஜயன் தலைமையிலான மாநில அரசுக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளன. கேரள அரசியலை உலுக்கியுள்ள தங்கம் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close